திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 33 - 15.08.2024
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி
திருமுறை : இரண்டாம் திருமுறை 61 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தனது இரண்டாவது தலயாத்திரையின் போது பல்லவனீச்சரம் மற்றும் சாய்க்காடு (இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளன) ஆகிய இரண்டு தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள திருவெண்காடு தலம் செல்கின்றார். திருவெண்காடு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கண் காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகம் பாடி (2.48) பிள்ளை வரம் வேண்டுவோர், வெண்காடு தலம் சென்றடைந்து ஒரு மண்டலம் விரதமிருந்து பெருமானை அனுதினமும் வணங்கி ஆங்குள்ள முக்குளத்தில் நீராடினால் பழைய வினைகள் கழிக்கப்பட்டு, மக்கட்பேறு ஏற்படும் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். மேலும் மந்திர மறையவை என்று தொடங்கும் பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் களையப் பெறுவார்கள் என்பது தனது ஆணை என்று கூறுகின்றார். இங்கே சிந்திக்கப்படும் பதிகத்தின் பாடல்களில், பெருமான் தனது அடியார்களுக்கு எவ்வாறெல்லாம் இறைவன் அருள் புரிகின்றார் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.
பாடல் எண் : 01
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்று உள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே.
பாடல் எண் : 02
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.
பாடல் எண் : 03
தண் முத்து அரும்பத் தடம் மூன்றுடையான் தனை உன்னிக்
கண் முத்து அரும்பக் கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும் வெண்காடே.
பாடல் எண் : 04
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரையார் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.
பாடல் எண் : 05
பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்
தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே.
பாடல் எண் : 06
ஒளிகொள் மேனி உடையாய் உம்பர் ஆளீ என்று
அளியராகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்தானை வணங்கும் வெண்காடே.
பாடல் எண் : 07
கோள் வித்தனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கேத்த மாணிக்காய்
ஆள்வித்து அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.
பாடல் எண் : 08
வளையார் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி
முளையார் மதியம் சூடி என்றும் முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
விளையார் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.
பாடல் எண் : 09
காரியானோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.
பாடல் எண் : 10
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.
பாடல் எண் : 11
விடையார் கொடியான் மேவி உறையும் வெண்காட்டைக்
கடையார் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே.
திருச்சிற்றம்பலம்
இந்த தலம் சீர்காழிக்கு தென்மேற்கில் பதினேழு கி.மீ. தூரத்தில், பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. சீர்காழியிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. ஐந்து பிராகான்கள் கொண்ட பெரிய கோயில். இறைவனின் திருநாமம் சுவேதவன ஈஸ்வரர், வெண்காட்டு நாதர்; அம்பிகையின் திருநாமம் பிரம்மவித்யா நாயகி; குடந்தையைச் சுற்றியுள்ள தலங்களில் புதனுக்கு உரிய தலமாக கருதப் படுகின்றது. உமையன்னை, பிரமன், இந்திரன், ஐராவதம், புதன், மருத்துவன், அச்சுதக் களப்பாளர், சுவேதகேது, வேதராசி ஆகியோர் வழிபட்ட பயன் பெற்ற தலம். மூன்று குளம், மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தலமரங்கள் கொண்ட புகழினை உடையது. வெண்காடர், அகோர சிவன், நடராஜர் என்று மூன்று மூர்த்திகள்; அகோரசிவன் இந்த தலத்திற்கு உரிய சிறப்பான மூர்த்தி. பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி என்று மூன்று தேவிகள்; ஆல், வில்வம் கொன்றை என்று மூன்று தலமரங்கள். பிரம்ம வித்யா நாயகி, தனது வலது மேல் கையில் ருத்ராக்ஷம் வைத்திருப்பதை காணலாம். கல்வி அறிவை கொடுக்கக் கூடிய ஆற்றல் தேவிக்கு உள்ளதை வெளிப்படுத்தும் தன்மையை இந்த நிலை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். தந்தை சந்திரனாலும் தாய் தாரையாலும், அனாதையாக விடப்பட புதனுக்கு ஞானத்தை அருளி வளர்த்தவள் அன்னை. இதனை உணர்த்தும் முகமாக, அம்பிகை சன்னதிக்கு அருகில் புதன் சன்னதி உள்ளது.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மீள்பதிவாக:-
திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/11.html
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை - 10. பல்லவனீச்சுரம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/10.html
திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9_11.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9_9.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9_7.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9.html
திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - 8. திருக்கலிக்காமூர் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/8.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - தென் திருமுல்லைவாயில் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post_4.html
திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post_2.html
திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post.html
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_31.html
திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_30.html
திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_46.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_28.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_27.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_25.html
திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_24.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html
திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html
திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html
திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html
திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html
Comments
Post a Comment