திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 23- 01.08.2024
இறைவர் திருப்பெயர் : சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்
இறைவியார் திருப்பெயர் : வெண்ணீற்று உமை நங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி
திருமுறை : மூன்றாம் திருமுறை 125 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : வெண்ணீற்று உமை நங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி
திருமுறை : மூன்றாம் திருமுறை 125 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
மக்கள் வழக்கில் ஆச்சாள் புரம் என்று வழங்கப்படுகிறது.
நல்லூர் - ஊரின் பெயர், பெருமணம் - கோயிலின் பெயர்.
ஞானசம்பந்தருக்கு
திருமணம் நடந்ததும், அவர், திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததும்
இத்தலத்தில் தான். (திருமணத்திற்கு வந்த அத்தனைப்பேரும் அந்த அற்புத
சோதியுள் கலந்தார்கள்.)
இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட "தோத்திர பூர்ணாம்பிகை" அம்மையுடன் மணகோலத்தில் உள்ள மூலத் திருமேனிகள் உள்ளன.
பாடல் எண் : 01
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் ஆய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே.
பாடல் எண் : 02
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம்
பரு மணலாக் கொண்டு பாவை நல்லார்கள்
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர்ப்
பெருமணத் தான் பெண்ணோர் பாகம் கொண்டானே.
பாடல் எண் : 03
அன்புறு சிந்தையராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே.
பாடல் எண் : 04
வல்லியந்தோள் உடை ஆர்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத்து உரி விரி கோவணம்
நல்லியலார் தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே.
பாடல் எண் : 05
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண்
நீறு உகந்தீர் நிரையார் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திருநல்லூர்ப் பெருமணம்
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே.
பாடல் எண் : 06
சிட்டப்பட்டார்க்கு எளியான் செங்கண் வேட்டுவப்
பட்டம் கட்டும் சென்னியான் பதியாவது
நட்டக்கொட்டு ஆட்டறா நல்லூர்ப் பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே.
பாடல் எண் : 07
மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய் புலித்தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே.
பாடல் எண் : 08
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கு இருந்தீர் எமைப் போக்கு அருளீரே.
பாடல் எண் : 09
ஏலுந்தண் தாமரையானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பு அறிகின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப்பெருமணம்
போலும் தம்கோயில் புரிசடையார்க்கே.
பாடல் எண் : 10
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர் வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடு எளிது ஆமே.
பாடல் எண் : 11
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத்தானை
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம் அவலம் இலரே.
திருநீலகண்ட_யாழ்ப்பாணர், முருக_நாயனார், திருநீலக்க_நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.
-
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மீள்பதிவாக:-
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_31.html
திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_30.html
திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_46.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_28.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_27.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_25.html
திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_24.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html
திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html
திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html
திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html
திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html
Comments
Post a Comment