திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

                                                               இறைவா..அனைத்தும் நீயே..

                                                             சர்வம் சிவார்ப்பணம்...

நாள் : 3 - 12. 07.2024








பாடல் எண் : 1

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.


பாடல் எண் : 2

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்

சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ

கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்

பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.


பாடல் எண் : 3

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்

எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்

சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்

திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


பாடல் எண் : 4

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்

தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்

கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.


பாடல் எண் : 5

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்

நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்

தேன்நி லாவிய சிற்றம் பலவனார்

வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.


பாடல் எண் : 6

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை

சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்

சிட்டர் பாலணு கான்செறு காலனே.


பாடல் எண் : 7

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்

திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்

விருத்த னாரிளை யார்விட முண்டவெம்

அருத்த னாரடி யாரை யறிவரே.


பாடல் எண் : 8

விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு

எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்

கண்நி றைந்த கடிபொழி லம்பலத்

துள்நி றைந்துநின் றாடு மொருவனே.


பாடல் எண் : 9

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்

வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்

தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை

ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.


பாடல் எண் : 10

நாடி நாரணன் நான்முக னென்றிவர்

தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ

மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்

தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.


பாடல் எண் : 11

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்

சதுரன் சிற்றம் பலவன் திருமலை

அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற

மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.







 தென்னாடுடைய சிவனே போற்றி!

 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

 அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

 சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

 பராய்த்துறை மேவிய பரனே போற்றி

 சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

 ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

 சீரார் திருவையாறா போற்றி

 ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

 பாகம் பெணுரு ஆனாய் போற்றி

 தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

 இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

 குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

 காவாய் கனகத் திரளே போற்றி

 கயிலை மலையானே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tutthamizhthirumurai.blogspot.com/2022/02/7-2.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html



Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)