திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

                                                               இறைவா..அனைத்தும் நீயே..

                                                             சர்வம் சிவார்ப்பணம்...


நாள் : 4 - 13. 07.2024

அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி



அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் பதிகத்தையும் பாடிய பின்னர், அருகில் இருக்கும் வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களில் உள்ள இறைவனை வழிபட்டு, பதிகங்கள் அருளிய பின்னர் மறுபடியும் தில்லைக் கூத்தனைக் காண ஆர்வம் கொண்டார். கழிப்பாலைத் தலத்திலிருந்து தில்லை வரும் வழியில், தில்லைப் பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்ற பொருள் படும் இந்த பதிகத்தைப் பாடியவாறே தில்லை வந்து சேர்கின்றார்.

1. பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,

அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை,

தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ? 



2. தீர்த்தனை, சிவனை, சிவலோகனை,

மூர்த்தியை, முதல் ஆய ஒருவனை,

பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்

கூத்தனை, கொடியேன் மறந்து உய்வனோ?



3. கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி,

இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான்,

சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை,

எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?




4. மாணி பால் கறந்து ஆட்டி வழிபட

நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என்

ஆணியை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற

தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?



5. பித்தனை, பெருங்காடு அரங்கா உடை

முத்தனை, முளைவெண் மதி சூடியை,

சித்தனை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற

அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?



6. நீதியை, நிறைவை, மறைநான்கு உடன்

ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்

சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து

ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?




7. மை கொள் கண்டன், எண் தோளன், முக்கண்ணினன்,

பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்,

செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்

ஐயனை, அடியேன் மறந்து உய்வனோ?



8. முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்

தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்

எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை,

இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?



9. கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை,

வார் உலாம் முலை மங்கை மணாளனை,

தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,

ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ?



10.ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம்

வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்,

தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை,

பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ?




 தென்னாடுடைய சிவனே போற்றி!


 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


 அண்ணாமலை எம் அண்ணா போற்றி!


கண்ணாரமுதக் கடலே போற்றி.


 சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி


 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி


 பராய்த்துறை மேவிய பரனே போற்றி


 சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி


 ஆரூர் அமர்ந்த அரசே போற்றி


 சீரார் திருவையாறா போற்றி


 ஏகம்பத்துறை எந்தாய் போற்றி


 பாகம் பெணுரு ஆனாய் போற்றி


 தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி


 இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி


 குவளைக் கண்ணி கூறன் காண்க 


அவளுந் தானும் உடனே காண்க


 காவாய் கனகத் திரளே போற்றி


 கயிலை மலையானே போற்றி போற்றி


மீள்பதிவாக:-

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tutthamizhthirumurai.blogspot.com/2022/02/7-2.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)