திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே.

                                                                  சர்வம் சிவார்ப்பணம்...

நாள் : 32 - 14.08.2024


அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி 


இரண்டாவது தல யாத்திரையாக நனிபள்ளி சென்ற திருஞான சம்பந்தர், நனிபள்ளி நிலத்தின் தன்மையை தனது தேவாரப் பாடலால் மாற்றிய பின்னர், அங்கிருந்து தலைச்சங்காடு, வலம்புரம், சாய்க்காடு மற்றும் பல்லவனீச்சசரம் ஆகிய தலங்கள் செல்கின்றார், அதன் பின்னர் திருவெண்காடு தலம் சென்று அடைகின்றார். திருஞானசம்பந்தர் தங்களது ஊருக்கு வருவதை அறிந்த, அந்த தலத்தில் இருந்த அடியார்கள், சொல்ல ஒண்ணாத மகிழ்ச்சி அடைந்தவர்களாக, அவரின் எதிரே சென்று அவரை வரவேற்று பின்னர் அவரை அழைத்துக் கொண்டு வெண்காடு நகரத்திற்குள்ளே புகுந்தனர். பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயில் கோபுரத்தைக் கண்ட பிள்ளையார், மிகுந்த மகிழ்ச்சியுடன் கோபுரத்தின் முன்னர் தாழ்ந்து வணங்கி, அடியார்கள் புடை சூழ திருக்கோயிலை வலம் வந்த பின்னர், பெருமானின் சன்னதி முன்னர், நிலத்தில் விழுந்து தொழுதார். திருவெண்காடு தலத்தில் குடி கொண்டிருக்கும் மெய்ப்பொருள் ஆகிய இறைவனைப் புகழ்ந்து கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் சீகாமரம் பண்ணில் அமைந்த தேவார திருப்பதிகம் பாடினர் என்று சேக்கிழார் கூறுகின்றார்.


மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்  


கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,

பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,

பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,

வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.  1



பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு

ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;

வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்

தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே.  2



மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,

எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,

பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன்

விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.  3



விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்,

மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,

தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.   4



வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்

மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,

ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.   5




தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;

ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்

பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை

வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6



சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;

அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய,

மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும்

முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே. 7



பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த

உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில்

கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,

விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே. 8



கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்

ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான்

வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று

உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே. 9



போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்

பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்;

வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று

ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே! 10



தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்

விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்

பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,

மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.  11



திருச்சிற்றம்பலம் 


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை - 10. பல்லவனீச்சுரம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/10.html

திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9_11.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9_9.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9_7.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/9.html

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - 8. திருக்கலிக்காமூர் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/8.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - தென் திருமுல்லைவாயில் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post_4.html

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post_2.html

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post.html

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_31.html

திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_30.html

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_46.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_28.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_27.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_25.html

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_24.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html

திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)