திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

                                                                இறைவா..அனைத்தும் நீயே.

                                                                    சர்வம் சிவார்ப்பணம்...


நாள் : 16- 25. 07.2024

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை :  மூன்றாம் திருமுறை 44 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

தனது நான்காவது தலயாத்திரையினை தில்லையில் தொடங்கிய திருஞானசம்பந்தர், தில்லைச் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வேட்களம், கழிப்பாலை சிவபுரி ஆகிய தலங்களுக்கும் சென்றார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். கழிப்பாலை சென்ற ஞானசம்பந்தர், அந்த தலத்து இறைவன் மீது இரண்டு பதிகங்களை அருளினார். புனலாடிய புன்சடை என்று தொடங்கும் பதிகத்தை படித்த  நாம், இந்த தலத்தின் மீது சம்பந்தர் அருளிய மற்றொரு பதிகத்தை சிந்திக்கலாம்



 பாடல் எண் : 01

வெந்த குங்கிலியப் புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும் அளவும் அறியாததோர்
சந்தமால் அவர் மேவிய சந்தமே.



பாடல் எண் : 02

வானிலங்க விளங்கும் இளம்பிறை
தானலங்கல் உகந்த தலைவனார்
கானிலங்க வரும் கழிப்பாலையார்
மானலம் மடநோக்கு உடையாளொடே.



பாடல் எண் : 03

கொடிகொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்
பொடிகொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள்
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே.



பாடல் எண் : 04

பண்ணலம் பட வண்டறை கொன்றையின்
தண்ணலங்கல் உகந்த தலைவனார்
கண்ணலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே.



பாடல் எண் : 05

ஏரினார் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்
காரினார் பொழில்சூழ் கழிப்பாலையெம்
சீரினார் கழலே சிந்தை செய்ம்மினே.



பாடல் எண் : 06

துள்ளும் மான்மறி அம்கையில் ஏந்தி ஊர்
கொள்வனார் இடு வெண்தலையில் பலி
கள்வனார் உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினையாயின ஓயுமே.



பாடல் எண் : 07

மண்ணினார் மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர் இனிது ஏத்துமின் பாகமும்
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்றமுக்
கண்ணினார் உறையும் கழிப்பாலையே.



பாடல் எண் : 08

இலங்கை மன்னனை ஈர் ஐந்து இரட்டிதோள்
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்துலவும் கழிப்பாலையை
வலம் கொள்வார் வினையாயின மாயுமே.



பாடல் எண் : 09

ஆட்சியால் அலரானொடு மாலுமாய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே.


பாடல் எண் : 10

செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை எனோ கழிப்பாலையெம்
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்மினே.




பாடல் எண் : 11

அந்தண் காழி அருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுலகு ஆடல் முறைமையே. 

திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

 சீரார் திருவையாறா போற்றி

 ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

 பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

 காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html

திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)