திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

                                                                  இறைவா..அனைத்தும் நீயே.

                                                                   சர்வம் சிவார்ப்பணம்...


நாள் : 8 - 17. 07.2024

இறைவர் திருப்பெயர்  : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர்  : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை      :  நான்காம் திருமுறை 81வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர்   : திருநாவுக்கரசு சுவாமிகள்




பாடல் எண் : 01

கருநட்ட கண்டனை அண்டத் தலைவனை, கற்பகத்தை 

செருநட்ட மும்மதில் எய்ய வல்லானை செந் தீ முழங்கத் 

திருநட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்துப் 

பெருநட்டம் ஆடியை “வானவர் கோன்” என்று வாழ்த்துவனே.




பாடல் எண் : 02

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா

சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.




பாடல் எண் : 03

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே

நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 

பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி

என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே.




பாடல் எண் : 04

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் 

மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!


பாடல் எண் : 05

வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின்

பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தர் உள்ள

கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்துக் 

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமையே.



பாடல் எண் : 06

பூத்தன பொற்சடை பொன்போல் மிளிர புரிகணங்கள்

ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூதக்கணம்

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக் 

கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என் தன் கோல்வளைக்கே.



பாடல் எண் : 07

முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்

துடிகொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரிகுழலாள்

படிகொண்ட பாகமும் பாய் புலித்தோலும் என் பாவி நெஞ்சில் 

குடிகொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே.



பாடல் எண் : 08

படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்

இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன் 

அடைக்கலம் கண்டாய் அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே.




பாடல் எண் : 09

பொன் ஒத்த மேனிமேல் வெண் நீறு அணிந்து புரிசடைகள்

மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர்வேடச்

சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 

என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால் இவ் இரு நிலமே.


பாடல் எண் : 10

சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் சந்திரனை

வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் 

தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 

ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே.



தென்னாடுடைய சிவனே போற்றி!

 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

 சீரார் திருவையாறா போற்றி

 ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

 பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

 காவாய் கனகத் திரளே போற்றி

 கயிலை மலையானே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)