திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

                                                                   இறைவா..அனைத்தும் நீயே.

                                                                  சர்வம் சிவார்ப்பணம்...


நாள் : 21- 30. 07.2024


இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை :  ஆறாம்  திருமுறை 

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்





அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி 

 ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,

தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார்,

கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்

வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 1]



முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று,

முன்னும் ஆய், பின்னும் ஆய், முக்கண் எந்தை;

பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை,

பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார்; பெரிய நஞ்சுக்

கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை- கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;

மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை,

வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 2]



நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன் தன்னை நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆய

ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள் தன்னை ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்த,

களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;

வளி உண்டு ஆர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே. [ 3]



பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்;

அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்-

கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மடி நாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 4]


விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து,   வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும்

எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல் ஏழ்

ஆனாய்! இறை ஆனாய் எம் இறையே! என்று நிற்கும்

கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார்,

மண் ஆன மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 5]



விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி கதிரோன்,   எரி சுடரான், விண்ணும் ஆகி,

பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி; பாசுபதன்; தேசமூர்த்தி;

கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்- கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 6]



பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதை மீர்காள்!

நிணம் புல்கு சூலத்தர்; நீலகண்டர்; எண் தோளர்;   எண் நிறைந்த குணத்தினாலே

கணம் புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி உள்ளார்-கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 7]



இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை, என் சிந்தை மேவி உறைகின்றானை,

முயல்வானை, மூர்த்தியை, தீர்த்தம் ஆன தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன்

கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மயல் ஆய மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 8]



செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து, சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால்

உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம்

எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம்

கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 9]



பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன் புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,

ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்

கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,

வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 10]


திருச்சிற்றம்பலம் 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_46.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_28.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_27.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_25.html

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_24.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html

திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)