சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)
இறைவா..அனைத்தும் நீயே.
சர்வம் சிவார்ப்பணம்...
நாள் : 22- 31.07.2024
இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்
இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி
திருமுறை : ஏழாம் திருமுறை
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பாடல் எண் : 01
செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே.
பாடல் எண் : 02
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
பாடல் எண் : 03
ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
பாடல் எண் : 04
சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்
கரும்பாரும் கழனிக் கழிப்பாலை மேயானே.
பாடல் எண் : 05
ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்து அருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய்
கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மாமறுகின்
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே.
பாடல் எண் : 06
ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலி அதள்மேல்
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாறக்
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவைபோக
பார்த்தானுக்கு இடமாம் பழியில் கழிப்பாலை அதே.
பாடல் எண் : 07
பருத்தாள் வன்பகட்டைப் படமாக முன்பற்றி அதள்
உரித்தாய் ஆனையின் தோல் உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
பாடல் எண் : 08
படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் தலைபத்தொடு தோள்நெரியக்
கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே.
பாடல் எண் : 09
பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே.
பாடல் எண் : 10
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மீள்பதிவாக:-
திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_30.html
திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_46.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_28.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_27.html
திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_25.html
திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_24.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html
திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html
திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html
திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html
திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html
Comments
Post a Comment