திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - தென் திருமுல்லைவாயில்

                                                            இறைவா..அனைத்தும் நீயே.

                                                                  சர்வம் சிவார்ப்பணம்...


நாள் : 25- 05.08.2024

தனது இரண்டாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவெண்காடு சென்ற ஞானசம்பந்தர், வெண்காட்டு வேந்தனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடி வணங்கிய பின்னர், அருகில் உள்ள திருமுல்லை வாயில் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வெண்காட்டு பெருமானை விட்டு பிரிவதற்கு மனமின்றி பிரிந்தார் என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில் மருவிய பதிகள் சென்றார் என்று குறிப்பிடும் தலங்கள் எவை என்று தெரியவில்லை என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பின்னர் சீர்காழி வந்து சேர்ந்தார் என்று குறிப்பிடுவதால், இந்த தலத்துடன் ஞானசம்பந்தரின் இரண்டாவது தலயாத்திரை முடிவடைகின்றது. 


இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. சீர்காழியிலிருந்து பதினான்கு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். சீர்காழியிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. திருவெண்காடு தலத்திற்கு அருகில், கடற்கரையில் உள்ளது. முல்லைவாயில் என்ற பெயருடன் சென்னையின் அருகே வேறொரு தலம் இருப்பதால், வேறுபடுத்தி காட்டும் வண்ணம் தென்திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கோதை நாயகி. சுயம்பு இலிங்கம். தட்சிணாமூர்த்தி வடிவம் மேற்கொண்டு, இறைவன் உமை அன்னைக்கு பஞ்சாக்கர மந்திரம் உபதேசம் செய்த தலமாக கருதப்படுகின்றது. சிவபெருமான் குருவாக கருதப் படுவதால், இங்கே பள்ளியறை இல்லை.


இலிங்கத்தின் திருமேனியில் வெட்டுத் தழும்புகள் காணப்படுகின்றன. சோழ மன்னன் கிள்ளிவளவன் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட போது, கடலில் நீராடி வியாதியை போக்கிக் கொள்ளலாம் என்று இந்த பக்கம் வந்தான். அப்போது அவனது குதிரையின் கால்கள் முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டன. முல்லைக் கொடியினை தனது வாளினால் அறுத்த மன்னன், தனது வாளினில் இரத்தம் தோய்ந்து இருந்ததைக் கண்டு இரத்தம் எங்கிருந்து வந்தது என்பதை அரிய முயன்றான். அவன் ஒரு லிங்கம் தலையில் வெட்டுப்பட்டு இருந்ததையும் அதன் மேல் இரத்தம் வடிந்ததையும் கண்டு அச்சம் கொண்டான். தான் செய்த சிவ அபராதத்திற்கு தனது உயிரினை மாய்த்துக் கொள்வதே சிறந்த பிராயச்சித்தம் என்று கருதிய மன்னன், தனது தலையை அறுத்துக் கொள்வதற்கு தனது வாளினை உருவினான். அப்போது பெருமான் இடபத்தின் மேல் அமர்ந்தவராக, உமை அன்னையுடன் மன்னனுக்கு காட்சி அளித்தார். மனம் மகிழ்ந்த மன்னன் பெருமானுக்கு கோயில் கட்டியதாக தலபுராணம் கூறுகின்றது. இலிங்கத்தின் மேல் கத்தியால் ஏற்பட்ட அடையாளத்தையும் முல்லைக் கொடிகள் சுற்றி படர்ந்ததால் ஏற்பட்ட அடையாளத்தையும் இன்றும் காணலாம்.


கசாலி என்ற முனிவரின் மகன் வாமதேவர், தனது தந்தை இறந்த பின்னர், தந்தையின் எலும்புகளை பல தீர்த்தத்தில் கரைத்தார். எங்கும் எந்தவிதமான மாறுதலும் ஏற்படவில்லை. இந்த தலத்தில் கரைத்த போது எலும்புகள் மணிகளாக மாறின. வியப்படைந்த முனிவர், தனது தந்தையின் ஈமக் கிரியைகளை இங்கே செய்தார் என்று கூறுவார்கள். இந்த காரணம் பற்றியே புண்ணிய காலங்களில் இந்த தலத்தில் உள்ள கடலில் நீராடுவது சிறப்பாக கருதப் படுகின்றது.














1. துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்

ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரன் ஊர்

களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்

தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடும் திருமுல்லைவாயில் இதுவே


2. பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்

அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்

உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்

தெருவத்தில் வந்து செழு முத்து அலைக்கொள் திருமுல்லைவாயில் இதுவே


3. வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்

ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்

பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே


4. ஒன்றொன்றொடொன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய்

அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர்

குன்று ஒன்றொடொன்று குலை ஒன்றொடொன்று கொடி ஒன்றொடொன்று குழுமிச்

சென்றொன்றொடொன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே


5. கொம்பு அன்ன மின்னின் இடையாளொர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்

நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானில் மதியேறு சென்னி அரனூர்

அம்பன்ன ஒண் கணவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்

செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே


6. ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன்

ஆனேறு அது ஏறி அழகேறு நீறன் அரவேறு பூணும் அரனூர்

மானேறு கொல்லை மயிலேறு வந்து குயிலேறு சோலை மருவித்

தேனேறு மாவின் வளமேறி ஆடு திருமுல்லைவாயில் இதுவே


7. நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்

அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி அரனூர்

மஞ்சாரும் மாட மனை தோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்

செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே



8. வரை வந்தெடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய

உரை வந்த பொன்னின் உரு வந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர்

வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்

திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திருமுல்லைவாயில் இதுவே


9. மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்

பாலாடு மேனி கரியானும் உன்னி அவர் தேட நின்ற பரனூர்

காலாடு நீல மலர் துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலில்

சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே


10. பனைமல்கு திண் கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே

நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர்

வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கு நெரியச்

சினை மல்கு புன்னை திகழ் வாச நாறு திருமுல்லைவாயில் இதுவே


11. அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார்

திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திருமுல்லைவாயில் இதன்மேல்

தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானமிகு பந்தன் ஒண் தமிழ்களின்

அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே


திருச்சிற்றம்பலம் 


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி


மீள்பதிவாக:-

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post_2.html

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/08/blog-post.html

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_31.html

திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_30.html

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_46.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_28.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_27.html

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_25.html

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_24.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html

திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)