திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

                                                                 இறைவா..அனைத்தும் நீயே.

                                                                    சர்வம் சிவார்ப்பணம்...


நாள் : 17- 26. 07.2024


இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை :  நான்காம்  திருமுறை 

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்




அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி 

வன பவளவாய் திறந்து, வானவர்க்கும் தானவனே! என்கின்றாளால்;
சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன் என்கின்றாளால்;
அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ! - 1

வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே! என்கின்றாளால்;
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்;
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன் என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! - 2

பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது என்கின்றாளால்;
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்;-
மறம் கிளர் வேல் கண்ணாள்,- மணி சேர் மிடற்றவனே! என்கின்றாளால்-
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! - 3

இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால்-
சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன் என்கின்றாளால்-
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! - 4

பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன் என்கின்றாளால்;
விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே! என்கின்றாளால்;
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே! என்கின்றாளால்-
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! - 5


பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே! என்கின்றாளால்;
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே! என்கின்றாளால்;
பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே! என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ. -6


முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம் என்கின்றாளால்;
அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம் என்கின்றாளால்;
சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! -7


ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்;
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே! என்கின்றாளால்;
பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! -8


வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே! என்கின்றாளால்;
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான் என்கின்றாளால்;
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! -9

அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே! என்கின்றாளால்;
சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான் என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ! -10



திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

 சீரார் திருவையாறா போற்றி

 ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

 பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

 காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_24.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post_23.html

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை - 2.026 - திருநெல்வாயில்(திருவுச்சி) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/2026.html
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறை - 5.42 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/542.html

திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறை - 1.39 - திருவேட்களம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/139.html

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - 7.090 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/7090.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.002 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6002.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/6001.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.81 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/481.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.080 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/4080.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 4.23 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/423.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/22.html

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/52.html

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை- ஐந்தாம் திருமுறை - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/51.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - மூன்றாம் திருமுறை - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/blog-post.html

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) - https://tutthamizhthirumurai.blogspot.com/2024/07/180.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)