நலம் தரும் பதிகங்கள் - திருநீலகண்டப் பதிகம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் நாம் காண இருப்பது நலம் தரும் பதிகங்கள் வரிசையில் திருநீலகண்டப் பதிகம் ஆகும். கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கொடிய நோய்களை தீர்க்கக் கூடிய திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம் பாடி நோயிலிருந்து விடுபடுவோம். 

திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்றூர் ( திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலை சேர்ந்த ஐந்து துணை சிவாலயங்கள் உள்ளன.) தலத்தில் திருஞானசம்பந்தர் தன் அடியார்களுடன் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். 

அப்போது அந்த பகுதியில் ஒரு விஷக் காய்ச்சல் வேகமாக பரவி மக்களை மிகவும் வருத்தியது. அப்போது மக்களை காக்கும் பொருட்டு காழிப்பிள்ளையார் திருநீலகண்டப் பதிகம் பாடி, அந்த கொடிய விரட்டியதாக வரலாறு கூறுகிறது.இந்த பதிகம் விஷக் காய்ச்சல் மட்டுமல்ல எல்லா விதமான கொடிய நோய்களை போக்கும் வல்லமை மிக்கது. அதோடு ஊழ்வினையையும், செய்வினை, தீவினையிலிருந்து நம்மை காக்கும் சக்தி வாய்ந்தது.


திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப்  பதிகம் - செய்வினையும்,தீவினையும், குளிர்காய்ச்சலும் நீங்க ஓத வேண்டிய பதிகம் 


    அவ்வினைக்கு  இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்

    உய்வினை நாடாது இருப்பதும் உம் தமக்கு ஊனம்  அன்றே 

    கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

    செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்



    காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்

    ஏவினையால் எயில்மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்

    பூவினைக்கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்

    தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்



    முலைத்தடம்  மூழ்கிய போகங்களும் மற்று எவையும்  எல்லாம்

    விலைத்தலை ஆவணம் கொண்டு எமை  ஆண்ட விரிசடையீர்

    இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்

    சிலைத்து எமைத்  தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்



    விண்ணுலகு  ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்

    புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

    கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்

    திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்



    மற்றுஇணை இல்லா மலை திரண்டு அன்ன திண்தோள் உடையீர்

    கிற்று எமை  ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ

    சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்

    செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்



    மறக்கும்  மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

    பிறப்பு இல் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்

    பறித்த மலர் கொடுவந்து உமை  ஏத்தும் பணி அடியோம்

    சிறப்புஇலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்



    கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழலடிக்கே

    உருகிமலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம்

    செரு இல்  அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே

    திரு இலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்



    நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

    தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்

    தோற்றினும்  தோற்றும்  தொழுது வணங்குதும் நாம் அடியோம்

    சீற்றம்அதுஆம்  வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்



    சாக்கியப்பட்டும் சமண்உரு ஆகி உடை ஒழிந்தும்

    பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்

    பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்

    தீக்குழித்  தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்



    பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன்  கழல் அடைவான்

    இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்

    திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

    நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே


திருச்சிற்றம்பலம்!  திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  



தென்னாடுடைய சிவனே போற்றி!

      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
 
       அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.
 
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
 
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
 
சீரார் திருவையாறா போற்றி
 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
 
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
 
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
 
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
 
குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க
 
காவாய் கனகத் திரளே போற்றி
 
கயிலை மலையானே போற்றி போற்றி


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே… - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_30.html

அகத்தியர் தேவாரத் திரட்டு அனுதினமும் பாராயணம் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_29.html

 நலம் தரும் பதிகங்கள் - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_27.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Comments

Popular posts from this blog

திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

திருநாவுக்கரசர் - தேவாரம்- நான்காம் திருமுறை - 22 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)