Posts

Showing posts from July, 2024

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 22- 31.07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  ஏழாம்  திருமுறை  அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் எண் : 01 செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும் அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவாமே முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும்  வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே. பாடல் எண் : 02 எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்  கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. பாடல் எண் : 03 ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்  பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்  கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே. பாடல் எண் : 04 சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர்  அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன் விரும்பேன் உன்னை அல்

திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                   இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 21- 30. 07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  ஆறாம்  திருமுறை  அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து, தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார், கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும் வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 1] முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று, முன்னும் ஆய், பின்னும் ஆய், முக்கண் எந்தை; பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை, பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார்; பெரிய நஞ்சுக் கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை- கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்; மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை, வழி வைத்தார்க்க

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                     சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 20- 29. 07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  ஐந்தாம்  திருமுறை  அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்  அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி  வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்; கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் அண்ணலே அறிவான், இவள் தன்மையே!  1 மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான், திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள், பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே. 2 மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்; குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ: அழகனே! கழிப்பாலை எம் அண்ணலே! இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்! என்னுமே. 3 செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்; கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம் ஐயனே அறிவான், இவள் தன்மையே. 4 கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய ஒ

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                 இறைவா..அனைத்தும் நீயே.                                                                     சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 19- 28. 07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  நான்காம்  திருமுறை  அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்  நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று, கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்! பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்; எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே! 1 பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும் கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை, பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே. 2 நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று, இங்கு நமன்தமரால் கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே, குளிர் ஆர் தடத்துத் தாள் பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு ஆட் பட்டொழிந்தம் அன்றே, வல்லம் ஆய் இவ் அகலிடத்தே! 3 சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில்

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                     சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 18- 27. 07.2024 சிதம்பரத்திலிருந்து, அருகில் இருந்த வேட்களம் சென்ற அப்பர் பிரான், அங்கிருந்து கழிப்பாலை தலத்திற்கும் சென்றார். அங்கு ஐந்து திருப்பதிகங்கள் பாடிய பின்னர் மீண்டும் தில்லைக்குத் திரும்பினார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மண்ணுலகத்தார் நன்றாக வாழும் பொருட்டு பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். நாம் அனைவரும் அப்பர் பிரானைப் பின்பற்றி அவர் அருளிய பாடல்களைப் பாடி உய்வினை அடையவேண்டும் என்ற செய்தியை சேக்கிழார் கூறுகின்றார். இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  நான்காம்  திருமுறை  அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர் பாடல் எண் : 01 நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே. பாடல்