நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே…
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இந்தப் பூமியில் பிறந்த நாம் எப்படி வாழக் கற்றுக் கொண்டோம்? அனைத்தும் நம் பெற்றோர் நமக்கு சொல்லித் தருபவை ஆகும். நாட்கள் செல்ல, செல்ல, சிந்திக்கும் ஆற்றல் கொண்டு இன்னும் புது புது செய்திகளை நாம் பெற்று வருகின்றோம். இங்கே புது, புது என்பவை ஏற்கனவே நம் முன்னோர்கள், தாத்தன், பாட்டன், முப்பாட்டன், அதற்கும் முந்தைய தலைமுறை பின்பற்றி வந்ததாக இருக்கும். இது இல்வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. இறைவனை உணரும் வாழ்க்கைக்கும் பொருந்தும். சரி. விசயத்திற்கு வருவோம். நான்கு என்ற சொல்லுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பல விடயங்கள் இந்த நான்கில் அமைவதைக் காணலாம். திசைகள் நான்கு. வேதங்கள் நான்கு. பிரமனுக்கு முகங்கள் நான்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் நான்கு. சமயக் குரவர்கள் நால்வர். சந்தான குரவர்கள் நால்வர். தனு, கரண, புவன, போகங்கள் நான்கு. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என யுகங்கள் நான்கு. தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ நெறிகள் நான்கு. சாலோகம், சாரூபம், சாம