Posts

நலம் தரும் பதிகங்கள் - திருநீற்றுப் பதிகம்!

Image
                                                                 இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைய பதிவில் நாம் காண இருப்பது நலம் தரும் பதிகங்கள் வரிசையில் திருநீற்றுப் பதிகம் ஆகும். திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது. திருநீறு பற்றி பேசுவது என்றால் இந்த ஒரு பதிவு போதாது. அதனை திருஞானசம்பந்தர் வாய்மொழியால் காண உள்ளோம். உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்பநோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும். முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும்

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

Image
                                                                   இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 33 - 15.08.2024 இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி திருமுறை : இரண்டாம் திருமுறை 61 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் தனது இரண்டாவது தலயாத்திரையின் போது பல்லவனீச்சரம் மற்றும் சாய்க்காடு (இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளன) ஆகிய இரண்டு தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள திருவெண்காடு தலம் செல்கின்றார். திருவெண்காடு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கண் காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகம் பாடி (2.48) பிள்ளை வரம் வேண்டுவோர், வெண்காடு தலம் சென்றடைந்து ஒரு மண்டலம் விரதமிருந்து பெருமானை அனுதினமும் வணங்கி ஆங்குள்ள முக்குளத்தில் நீராடினால் பழைய வினைகள் கழிக்கப்பட்டு, மக்கட்பேறு ஏற்படும் என்று சம்பந்தர் உணர்த்துகி

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

Image
                                                                    இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 32 - 14.08.2024 அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி  இரண்டாவது தல யாத்திரையாக நனிபள்ளி சென்ற திருஞான சம்பந்தர், நனிபள்ளி நிலத்தின் தன்மையை தனது தேவாரப் பாடலால் மாற்றிய பின்னர், அங்கிருந்து தலைச்சங்காடு, வலம்புரம், சாய்க்காடு மற்றும் பல்லவனீச்சசரம் ஆகிய தலங்கள் செல்கின்றார், அதன் பின்னர் திருவெண்காடு தலம் சென்று அடைகின்றார். திருஞானசம்பந்தர் தங்களது ஊருக்கு வருவதை அறிந்த, அந்த தலத்தில் இருந்த அடியார்கள், சொல்ல ஒண்ணாத மகிழ்ச்சி அடைந்தவர்களாக, அவரின் எதிரே சென்று அவரை வரவேற்று பின்னர் அவரை அழைத்துக் கொண்டு வெண்காடு நகரத்திற்குள்ளே புகுந்தனர். பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயில் கோபுரத்தைக் கண்ட பிள்ளையார், மிகுந்த மகிழ்ச்சியுடன் கோபுரத்தின் முன்னர் தாழ்ந்து வணங்கி, அடியார்கள் புடை சூழ திருக்கோயிலை வலம் வந்த பின்னர், பெருமானின் சன்னதி முன்னர், நில

திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை - 10. பல்லவனீச்சுரம்

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 31 - 12.08.2024 அருளியவர் :  திருஞானசம்பந்தர் திருமுறை : முதல்-திருமுறை   நாடு :சோழநாடு காவிரி வடகரை  தலம் :  பல்லவனீச்சுரம்  கோவில் அமைப்பு : ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடம் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடக்கும் போது இடதுபுறம் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக்கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் உள்ள முருகப் பெருமானின் உருவம் பெரியதாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள் வைக்கப்பட்டும் உள்ளன. வெளிமண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி, நேரே இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்லவனேஸ்வரர் பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய கம்பீரமான காட்சியுடன் எழுந்தருளிய