Posts

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3

Image
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் பதிவாக இன்று காண உள்ளோம். பன்னிரு திருமுறை படிக்க படிக்க இன்பம். இவற்றையெல்லாம் நாம் அறிந்திட புல்லாகி,பூடாகி, புழுவாகி என்ற பிறப்பில் மனித பிறப்பில் இன்று அறிகின்றோம். பெறற்கரிய மானுடப் பிறப்பை நாம் பெற்று இருக்கின்றோம். ஆனால் இதன் அருமை அறியாது இருக்கின்றோம். மானுடப் பிறப்பின் அருமை தெரிந்தால் மட்டுமே நாம் திருமுறை பக்கம் கொஞ்சமாவது நாம் செல்ல இயலும்.  எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2

Image
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை இரண்டாம் நாள் பதிவை பகிர விரும்புகின்றோம். எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம். தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி

நலம் தரும் பதிகங்கள் - திருநீற்றுப் பதிகம்

Image
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைய பதிவில் நாம் காண இருப்பது நலம் தரும் பதிகங்கள் வரிசையில் திருநீற்றுப் பதிகம் ஆகும். திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது. திருநீறு பற்றி பேசுவது என்றால் இந்த ஒரு பதிவு போதாது. அதனை திருஞானசம்பந்தர் வாய்மொழியால் காண உள்ளோம். உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்பநோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும். முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும். பிணியால் பாதிக்கப் பட்டவருக்காக அவரது உறவினர்களும் சொல்லலாம். சிறிது விபூதியை சுவாமி முன் வைத்து, இந்

நலம் தரும் பதிகங்கள் - திருநீலகண்டப் பதிகம்

Image
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைய பதிவில் நாம் காண இருப்பது நலம் தரும் பதிகங்கள் வரிசையில் திருநீலகண்டப் பதிகம் ஆகும். கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கொடிய நோய்களை தீர்க்கக் கூடிய திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம் பாடி நோயிலிருந்து விடுபடுவோம்.  திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்றூர் ( திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலை சேர்ந்த ஐந்து துணை சிவாலயங்கள் உள்ளன.) தலத்தில் திருஞானசம்பந்தர் தன் அடியார்களுடன் ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.  அப்போது அந்த பகுதியில் ஒரு விஷக் காய்ச்சல் வேகமாக பரவி மக்களை மிகவும் வருத்தியது. அப்போது மக்களை காக்கும் பொருட்டு காழிப்பிள்ளையார் திருநீலகண்டப் பதிகம் பாடி, அந்த கொடிய விரட்டியதாக வரலாறு கூறுகிறது.இந்த பதிகம் விஷக் காய்ச்சல் மட்டுமல்ல எல்லா விதமான கொடிய நோய்களை போக்கும் வல்லமை மிக்கது. அதோடு ஊழ்வினையையும், செய்வினை, தீவினையிலிருந்து நம்மை காக்கும் சக்தி வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப்  பதிகம் - செய்வினையும்,தீவினையும், குளிர்காய்ச்சலும் நீங்க ஓத வேண்டிய பதிகம்      அவ்வினைக்கு  இவ்வ

நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே…

Image
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இந்தப் பூமியில் பிறந்த நாம் எப்படி வாழக் கற்றுக் கொண்டோம்? அனைத்தும் நம் பெற்றோர் நமக்கு சொல்லித் தருபவை ஆகும். நாட்கள் செல்ல, செல்ல, சிந்திக்கும் ஆற்றல் கொண்டு இன்னும் புது புது செய்திகளை நாம் பெற்று வருகின்றோம். இங்கே புது, புது என்பவை ஏற்கனவே நம் முன்னோர்கள், தாத்தன், பாட்டன், முப்பாட்டன், அதற்கும் முந்தைய தலைமுறை பின்பற்றி வந்ததாக இருக்கும். இது இல்வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. இறைவனை உணரும் வாழ்க்கைக்கும் பொருந்தும். சரி. விசயத்திற்கு வருவோம்.  நான்கு என்ற சொல்லுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பல விடயங்கள் இந்த நான்கில் அமைவதைக் காணலாம். திசைகள் நான்கு. வேதங்கள் நான்கு. பிரமனுக்கு முகங்கள் நான்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் நான்கு. சமயக் குரவர்கள் நால்வர். சந்தான குரவர்கள் நால்வர். தனு, கரண, புவன, போகங்கள் நான்கு. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என யுகங்கள் நான்கு. தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ நெறிகள் நான்கு. சாலோகம், சாரூபம், சாம

அகத்தியர் தேவாரத் திரட்டு அனுதினமும் பாராயணம் செய்வோம்!

Image
அனைத்து இறை அடியார்களுக்கும் TUT குழுமத்தின் சார்பாக வணக்கங்கள். இன்றைய பதிவில் அகத்தியர் தேவார திரட்டு பற்றி அறிய உள்ளோம். இந்த பதிவின் நோக்கம்  அனைத்து அடியார் பெருமக்களும் தினசரி பூஜையில் தேவாரம் பாட வேண்டும் என்பதே. முதலில் நாம் தேவாரம் பற்றி விளக்கமாக காண்போம். நம் குருநாதர் தொகுத்து கொடுத்த தேவாரப் பாடல்களை அகத்தியர் அடியார்களாகிய நாம் உணர்ந்து ஓதி வர வேண்டியது நாம் அவருக்கு செய்யும் கடமை ஆகும். இதன் மூலம் தமிழின் சிறப்பும் புரியும். தேவாரப் பாடல் பற்றிய தெளிவும் பிறக்கும். அகத்தியம் பற்றியும் உணர முடியும். தேவாரம்: தேவாரம் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூன்று இறையடியார்களால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 10 ஆம்  நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்