நலம் தரும் பதிகங்கள் - திருநீற்றுப் பதிகம்!
இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைய பதிவில் நாம் காண இருப்பது நலம் தரும் பதிகங்கள் வரிசையில் திருநீற்றுப் பதிகம் ஆகும். திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது. திருநீறு பற்றி பேசுவது என்றால் இந்த ஒரு பதிவு போதாது. அதனை திருஞானசம்பந்தர் வாய்மொழியால் காண உள்ளோம். உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்பநோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும். முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும்